பாராளுமன்றம் இரு நாட்கள் மட்டும் கூடும் - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2024

பாராளுமன்றம் இரு நாட்கள் மட்டும் கூடும்

பாராளுமன்றம் இவ்வாரம் நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய் மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி (புதன்கிழமை) மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதி என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.

பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment