பகிரங்க சேவை ஆணைக்குழு உறுப்பினராவதற்கு வாய்ப்பு : பாராளுமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு - News View

About Us

Add+Banner

Wednesday, September 4, 2024

demo-image

பகிரங்க சேவை ஆணைக்குழு உறுப்பினராவதற்கு வாய்ப்பு : பாராளுமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Application-for-Appointment-of-Member-to-the-Public-Service-Commission
பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாக, பாராளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, உள்ளூரதிகார சபை உறுப்பினராக இருக்கும் எவரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தகைமையுடையோராக இருக்கமாட்டார்கள்.

மேலும் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பதாக, அரச சேவையில் அரச உத்தியோகத்தராக அல்லது நீதித்துறை உத்தியோகத்தராக இருந்த எவரும் அவரின் நியமனத்திற்கு முன்பதாக, அவ்வாறான நியமனம் செயலூக்கம் பெறுகையில், அவ்வாறான பதவிகளில் இருந்து நீங்க வேண்டும் என்பதுடன் அரச உத்தியோகத்தராக அல்லது நீதித்துறை உத்தியோகத்தராக மேலும் நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றவராவர்.

www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள், 2024 செப்டெம்பர் 23 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில், “அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே” எனும் முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *