தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி : இரு கொலைகளின் பின்னணியுடன் தொடர்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 20, 2024

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி : இரு கொலைகளின் பின்னணியுடன் தொடர்பு

இன்று (20) காலை தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெதிமால விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடவத்த வீதியில் களுபோவில திசையிலிருந்து தெஹிவளை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அநுர கொஸ்தா எனும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் திண்மக்கழிவுப் பிரிவின் ஊழியரான, சரணங்கர பிரதேசத்தில், குணாலங்கர மாவத்தையில் வசிக்கும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடனும், நேற்றுமுன்தினம் (18) இரவு கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரணங்கர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடனும் இந்த கொலைச் சம்பவம் தொடர்புடையதென தெரிய வருவதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலையானது, தேர்தலுடன் தொடர்புயைட ஒரு சம்பவம் அல்ல என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment