துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியளித்தது தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 7, 2024

துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியளித்தது தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், வாக்குச் சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் பாதாள உலகக் கூட்டத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 70 இலட்சம் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment