தற்போது ஒரு ஹெக்ரயருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 15,000/- உர மானியத்தை, ஹெக்ரயர் ஒன்றுக்கு ரூ. 25,000 வரை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 14 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
2024 சிறுபோகச் செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தின் அடிப்படையில் வணிக வங்கிகள் ஊடாக உயர்ந்தபட்சம் 6,000 மில்லியன் ரூபாய்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடனை வழங்குவதற்காக ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி, விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment