முபீன், பரீட் ஆகியோரை கட்சியிலிருந்து இடைநிறுத்தவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் : ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2024

முபீன், பரீட் ஆகியோரை கட்சியிலிருந்து இடைநிறுத்தவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் : ஹிஸ்புல்லாஹ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் ஆகியோரை கட்சியிலிருந்து இடைநிறுத்தவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதில் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீனுக்கு எதிராக கட்சி நேரடியாக நடவடிக்கை எடுக்கும்.

பரீட் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் அவரை அதிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம்.

இந்த தேர்தலில் நமது கட்சி எடுத்த தீர்மானத்தை கட்சி ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை முழுமையாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment