அரச ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கடந்த ஜுலை 08, 09 ஆகிய இரு தினங்களில் கடமைக்கு சமுகமளித்திருந்த நிறைவேற்றுத்தர சேவைக்கு உட்படாத அரச ஊழியர்களுக்காக இம்மாதம் சம்பளத்துடன் செலுத்தப்படவிருந்த பத்தாயிரம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கக்கூடாது என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில், இதுபோன்ற மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவது ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை ஊக்குவிப்பதாக இருக்கலாம், என்பதினால் இந்த கொடுப்பனவை தேர்தலுக்குப்பின்னர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் மூலம் அமைச்சின் செலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment