பயங்கரவாதம் குறித்த புதிய கறுப்புப் பட்டியல் : குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படாதவர்கள் பலர் உள்ளடக்கம் : கவிஞர் அஹ்னாபின் பெயர் நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 6, 2024

பயங்கரவாதம் குறித்த புதிய கறுப்புப் பட்டியல் : குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படாதவர்கள் பலர் உள்ளடக்கம் : கவிஞர் அஹ்னாபின் பெயர் நீக்கம்

அரசு, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்­கிய நாடுகள் சட்­டத்தின் கீழ் 2024 ஜூன் மூன்றாம் திக­தி­யி­டப்­பட்ட 2387/02 ஆம் இலக்க அதி விஷேட வர்த்­த­மானி ஊடாக வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத நடவடிக்கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட தனி நபர்கள், அமைப்­புக்­களின் பெயர் விப­ரங்கள் அடங்­கிய கறுப்புப் பட்­டியல் மீண்டும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஜூன் 3 ஆம் திக­தி­யி­டப்­பட்ட 2387/02 ஆம் இலக்க வர்த்­த­மானி பிரகாரம் 60 இற்கும் மேற்­பட்ட‌ முஸ்லிம் நபர்­களும், 6 அமைப்புக்களும் தடை செய்­யப்­பட்டோர் குறித்­தான கறுப்புப் பட்டியலில் தொடர்ந்து உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

தனது கைது நட­வ­டிக்கை கார­ண­மாக சர்­வ­தேச அளவில் இலங்கையின் மனித உரி­மைகள் தொடர்பில் கேள்­வி­களை தொடுக்கச் செய்த கவி­ஞரும் இளம் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீமின் பெயர் தொடர்ச்­சி­யாக கறுப்புப் பட்­டி­யலில் உள்ளடக்கப்பட்டு சர்ச்­சை­களை தோற்­று­வித்த நிலையில், இம்­முறை அவ­ரது பெயர் பட்­டி­யலில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது. 

இத­னை­விட உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்டு, சாட்­சிகள் இல்­லா­மையால் நீதி­மன்றால் விடு­தலை செய்­யப்­பட்ட சிலரும், சட்டமா அதி­பரின் ஒப்­பு­த­லுடன் சாட்­சி­களில் காணப்­படும் பல­வீனம் கார­ண­மாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பலரும், நியா­ய­மான வழக்கு விசாரணைகளுக்கு கூட சந்­தர்ப்பம் அளிக்­கப்­ப­டாத பலரும் இந்த கறுப்புப் பட்­டி­யலில் தொடர்ந்தும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

எந்த நியா­ய­மான விசா­ர­ணைகள் மற்றும் கார­ணி­களும் இன்றி பலர் இவ்­வாறு குறித்த பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­மையால், குறித்த வர்த்­த­மா­னியை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்­த­ர­ணிகள் பலர் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு உதவி ஒத்­தாசை அளிப்­பதை தடுப்­பது குறித்தான நோக்­கத்­துக்­காக, 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஐ.நா. கட்­ட­ளை­களின் 4 (7) ஆம் விதி­வி­தா­னத்­துக்கு அமைய, பயங்கரவாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்கள் பட்டியலிடப்­ப­டு­கின்­றனர். இதனை இலங்கை 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்­கிய நாடுகள் சட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கின்­றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அப்­போ­தைய வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் வெளி­யிட்ட 1758/ 19 எனும் வர்த்­த­மானி ஊடாக இதற்­கான அடித்­தளம் இடப்­பட்­டது.

பின்னர், கடந்த 2014 மார்ச் 21 ஆம் திகதி, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை தொடர்­பி­லான முத­லா­வது கறுப்புப் பட்­டியல் அடங்­கிய வர்த்­த­மானி 1854/41 எனும் இலக்­கத்தின் கீழ் அப்­போ­தைய பாது­காப்பு செய­ல­ரான தப்­பி­யோ­டிய ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளியிடப்பட்­டி­ருந்­தது. 

அதில் 424 தனி நபர்­களும் 16 அமைப்­புக்­களும் தடை செய்­யப்­பட்டோர் பட்­டி­யலில் இணைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அது முதல் இறு­தி­யாக கடந்த 2023 ஜூன் 8 திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி வரை அவ்­வா­றான 9 தடைப் பட்­டி­யல்கள் அடங்­கிய வர்த்­த­மா­னிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு 1941/44 எனும் வர்த்­த­மானி வெளியிடப்பட்டுள்ள­துடன், 2016 ஆம் ஆண்டு 1992/25 எனும் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்டு தடை செய்­யப்­பட்­டோரின் பட்­டியல் வெளியிடப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு 2016/18 ஆம் இலக்க வர்த்த­மானி ஊடாக அப்­பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் ஊடாக அப்­பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது. 2019 மே 23 ஆம் திகதி 2124/32 எனும் இலக்­கத்தின் கீழும் 2019 செப்­டம்பர் 9 ஆம் திகதி 2140/16 எனும் இலக்­கத்தின் கீழும் இரு வர்த்­த­மா­னிகள் வெளியிடப்­பட்­டன.

இத­னை­விட கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 28 ஆம் திகதி 2216/37 எனும் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னரே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி 2291/02 எனும் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது. அது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி 2335/16 எனும் வர்த்­த­மானி ஊடாக திருத்­தப்­பட்­டது. இந் நிலை­யி­லேயே தற்­போ­தைய வர்த்­த­மானி புதிதாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதன்­படி தற்­போ­தைய‌ வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம், 210 தனி நபர்­களும் 15 அமைப்­புக்­களும் ஐ. நா. சட்­டத்தின் கீழ் பாது­காப்பு அமைச்­சினால் கறுப்புப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன‌.

அவ்­வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் வெளி­நா­டு­களில் தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லிகள் இயக்­கத்தின் கருத்­தி­யலை பரப்பும் வகையில் செயற்­பட்­டு ­வந்த அவ்­வி­யக்­கத்தின் கட்­ட­மைப்­பை­யொத்த தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லிகள், தமிழர் புனர்­வாழ்வு அமைப்பு, தமிழர் கூட்டிணை­வுக்­குழு, உல­கத்­த­மிழர் இயக்கம், நாடு ­க­டந்த தமி­ழீழ அரசாங்கம், உல­கத்­ த­மிழர் உதவி நிதியம், தலை­மைக்­ காரியாலயக்குழு, தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே மில் அத்தே இப்­ராஹிம், விலாயத் அஸ் செய்­லானி, தாருல் அதர் அல்­லது ஜாமியுல் அதர் பள்­ளி­வாசல், தேசிய கனே­டி­யத்­ த­மிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு, இலங்கை இஸ்­லா­மிய மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள் ஆகிய 15 அமைப்­புக்­களே தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள அமைப்­புக்கள் பட்­டி­யலில் உள்­ள­டங்­கு­கின்­றன.

எவ்­வா­றா­யினும் ஏற்­க­னவே இலங்கை இஸ்­லா­மிய மாணவர் இயக்கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை­களை எதிர்த்து அந்த இயக்கம் உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுத்­துள்­ளது. குறித்த வழக்கு நிலு­வையில் உள்ள பின்­ன­ணியில், இடைக்­கால தடை உத்­த­ர­வொன்றும் வழங்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்னோக்கி நகர்த்­தப்­பட்­டுள்ள நிலையில், அந்த இயக்கம் பயங்கவாத கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்டு பாது­காப்பு அமைச்சின் செய­லரால் விடுக்­கப்­பட்­டுள்ள வர்த்­த­மானி எந்­த­ளவு தூரம் நியா­ய­மா­னது என்­பது குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக அவ்வியக்கம் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் பட்­டி­யலில், வறிய மாண­வர்­க­ளுக்கு கல்­வியை வழங்­கிய சேவ்த பேர்ள் அமைப்பு எதற்காக அப்­பட்­டி­யலில் தொடர்ந்து பெய­ரி­டப்­பட்­டுள்­ளது என்­பது குறித்தும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன.

‘சேவ் த பேர்ள் ‘ பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக இதுவரை எங்கும் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் அந்த அமைப்பு கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டமை ஆச்­ச­ரி­ய­மா­னது என இது குறித்து விடி­வெள்­ளி­யிடம் பேசிய சமூக ஆர்­வலர் ஒருவர் கூறினார்.

சேவ்த பேர்ள் அமைப்பு, கடந்த 2020 ஆம் ஆண்டின் பின்னர், கட்டார் அறக்­கட்­ட­ளை­யிடம் இருந்து உத­வி­களைப் பெற்­றி­ருந்­த­மையை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டது. அவ்வமைப்பின் முன்­னணி செயற்­பாட்­டா­ள­ராக திகழ்ந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்­வா­றான நிலையில் கட்டார் அறக்­கட்­ட­ளையை பயங்­க­ர­வாத தடைப் பட்­டி­யலில் இருந்து இலங்கை நீக்­கு­வ­தாக அமைச்சர் கஞ்­சன விஜே­சே­கர கட்­டாரில் வைத்து 2020 இல் அறி­வித்­தி­ருந்தார். அவ்வாறான பின்­ன­ணியில் கட்டார் அறக்­கட்­ட­ளை­யிடம் இருந்து உத­வி­களைப் பெற்­ற­மையை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத குற்றச்சாட்டு சுமத்­தப்­பட்ட சேவ்த பேர்ளை புதி­தாக தடை செய்யப்பட்ட அமைப்­புக்கள் பட்­டி­யலில் தொடர்ச்­சி­யாக வைத்துள்ளமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னை­விட பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து கைது செய்யப்பட்டு பின்னர் சாட்­சியம் இல்­லா­மையால் நீதி­மன்றால் விடுவிக்­கப்­பட்­ட­வர்கள் உட்­பட பலர் இந்த கறுப்புப் பட்­டி­யலில் உள்ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

Vidivelli

No comments:

Post a Comment