தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் சிக்கிய இளைஞர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 20, 2024

தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் சிக்கிய இளைஞர்

உகாண்டாவிலிருந்து விமான தபால் சேவை மூலம் சீதுவையில் உள்ள களஞ்சியசாலை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேயின் போதைப் பொருள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (20) கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்களானது பொதிகளாக்கப்பட்ட குளிரூட்டி உதிரிப்பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு, மோதரை பிரதேசத்தில் உள்ள 27 வயது இளைஞரொருவரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரான இளைஞர் இந்த பொதிகளை எடுப்பதற்காகச் குறித்த களஞ்சியசாலைக்குச் சென்றிருந்தபோது அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொதிகளிலிருந்து 483 கிராம் கொக்கேயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment