அதிகரிக்கும் வெப்பம் ! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 21, 2024

அதிகரிக்கும் வெப்பம் ! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் நாளை (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவான நீரை அருந்துதல், நிழலான இடங்களில் இயன்றவரை ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சிறுவர்களை முடியுமான வரை வெளியில் அனுப்பாதிருத்தல் மற்றும் முதியவர்களை அதிக அக்கறையுடன் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment