2024 பாடசாலை பரீட்சை திகதிகள் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2024

2024 பாடசாலை பரீட்சை திகதிகள் வெளியீடு

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை, பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தரவினால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2024 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான உத்தேசிக்கப்பட்டுள்ள திகதிகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment