2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின அடிப்படையிலான, பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (02) கல்வி அமைச்சினால் இது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் g6application.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள பக்கத்தின் ஊடாக மாணவர்களுக்கு கிடைத்துள்ள பாடசாலைகளை அறிந்து கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் மேன்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment