நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் Tata Steel Chess போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதினார்.
இதில் கருப்பு நிறகாய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 62ஆவது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
இதன் மூலம் நடப்பு சாம்பியனை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதான பிரக்ஞானந்தா.
இதற்கு முன்னர் இந்த சாதனையை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நிகழ்த்தியிருந்தார்.
டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) லைவ் ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறியதுடன் இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 2,748 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 2,748.3 புள்ளிகளுடனும் உள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் தர வீரராக உருவெடுத்துள்ளார் பிரக்ஞானந்தா.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரேட்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தற்போது 2721.3 புள்ளிகளுடன் 27ஆவது இடத்தில் உள்ளார்.
13 சுற்றுகள் கொண்ட Tata Steel Chess தொடரில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment