சட்டவிரோத மின் இணைப்பால் எட்டு மாதங்களில் எட்டு கோடி ரூபா நட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 5, 2023

சட்டவிரோத மின் இணைப்பால் எட்டு மாதங்களில் எட்டு கோடி ரூபா நட்டம்

இந்த ஆண்டின் கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத மின்சாரம் இணைப்புக் காரணமாக சுமார் 8 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

சிலர் மின்மானியை மாற்றுதல் மற்றும் பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்டதாலேயே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபை தெரிவித்தது. 

இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்தபோது, “இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இவ்வாறான மின்சார கொள்முதலால் சபைக்கு 7 கோடியே 90 இலட்சத்து 74 ஆயிரத்து 857 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களில் மின்மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் இலங்கை மின்சார சபைக்கு 7 கோடியே 64 இலட்சத்து 27 ஆயிரத்து 649 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

இது மட்டுமின்றி, மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பாக 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 26 இலட்சத்து 47 ஆயிரத்து 207 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பான நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்களிடமிருந்து 36 இலட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment