பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஷ்ரஃப் சிஹாப்தீனின் "நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்" நூல் அறிமுக விழா - News View

About Us

About Us

Breaking

Sunday, November 5, 2023

பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஷ்ரஃப் சிஹாப்தீனின் "நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்" நூல் அறிமுக விழா

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடியைச் சேர்ந்த எழுத்தாளர், பன்முக ஆளுமை அஷ்ரஃப் ஷிஹாப்தீன் மொழி பெயர்த்த மேற்குலக பத்து முஸ்லிம் பெண் ஆளுமைகளது உரைகள் அடங்கிய "நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்" எனும் நூல் தொகுப்பின் அறிமுக விழா சனிக்கிழமை (4) இடம்பெற்றது.

ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் நிர்வாகத் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. காதர் கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். தாஹிர் அஸ்ஹரி கலந்து கொண்டார்.

அத்துடன், ஏனைய அதிதிகளாக பிரதேச அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நூல் அறிமுக விழாவில் முதற் பிரதியை தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் மஜீத் பெற்றுக் கொண்டதுடன், நூல் பற்றிய உரையை பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் மாணவர் விவகாரத்திற்கு பொறுப்பான உப அதிபர் அல் ஆலிமா எம்.ஏ.எப். ஹபிலா நிகழ்தியதுடன், நூல் ஏற்புரையை நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment