மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு ! பெற்றோர்களே பிள்ளைகளை உன்னிப்பாக கண்காணிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 5, 2023

மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு ! பெற்றோர்களே பிள்ளைகளை உன்னிப்பாக கண்காணிக்கவும்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே ஹெரோயின் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் பலியாகி வருவது மிகவும் பரிதாபகரமானது என உளவியலாளர் கலாநிதி கிஹான் அபேவர்தன தெரிவித்தார்.

ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்கள் ஏனைய போதைப் பொருள் பழக்கத்திற்கு அதிக நாட்டத்தை காட்டுகின்றனர், இதனால் அவர்களின் நிலைமை இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது என்று வைத்தியர் அபேவர்தன விளக்கினார்.

வைத்தியர் அபேவர்தன மேலும் கூறுகையில், ஹெரோயின் போதைப் பொருள் பாவனையை இடையில் நிறுத்துவதன் மூலம் உடல் சார்ந்த சோர்வு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கூடுதலான அளவில் ஹெரோயின் போதைப் பொருள் பாவனை செய்வதால் சுவாசத்தை கடுமையாக பாதிக்கும் அபாயநிலை உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வலிப்பு அல்லது உடல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஹெரோயின் போதைப் பொருள் பாவனையின் விளைவாக ஏற்படும் அறிகுறிகளாகும்.

எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு வைத்தியர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment