இலங்கைக்கு பொருட்களை கடத்த முற்பட்ட 4 படகுகள் : ஒரு தமிழக படகை மடக்கி பிடித்து நடுக்கடலில் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

இலங்கைக்கு பொருட்களை கடத்த முற்பட்ட 4 படகுகள் : ஒரு தமிழக படகை மடக்கி பிடித்து நடுக்கடலில் விசாரணை

இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை இன்று (24) அதிகாலை கடத்தி செல்வதாக இந்திய கடலோர பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமாக 4 இலங்கை படகுகளும், அதில் இருந்த 8 பேரையும், அதேபோன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு படகையும், அதிலிருந்த 4 பேரையும் இந்திய கடலோர பொலிஸார் மடக்கி பிடித்து நடுக்கடலில் வைத்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து உலர்ந்த ஒரு தொகை கடலட்டை மற்றும் மஞ்சள் போன்றவை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment