புத்தகங்களின் அட்டையில் மறைத்து கொண்டுவரப்பட்ட 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் : கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரிடம் சிக்கிய பெண் - News View

About Us

About Us

Breaking

Monday, October 23, 2023

புத்தகங்களின் அட்டையில் மறைத்து கொண்டுவரப்பட்ட 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் : கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரிடம் சிக்கிய பெண்

கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன் பெறுமதி சுமார் 23 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை, 42 வயதுடைய இந்தோனேசிய பெண்ணொருவரே நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இப்பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டாரூடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 8 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளுக்கு இடையில் நுட்பமான முறையில் மறைத்து வைத்து 4,598 கிராம் கொக்கைன் போதைப்பொருளை இவர் கொண்டு வந்துள்ளார் .

நேற்றுமுன்தினம் மதியம் 04.10 மணியளவில் QR 654 என்ற Qatar Airways விமானத்தில், இவர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment