தடுப்பூசி ஏற்றப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 7, 2023

தடுப்பூசி ஏற்றப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்

(எம்.வை.எம்.சியாம்)

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட 4 மாத குழந்தை இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெலிகம, நவகல பிரதேசத்தைச் சேர்ந்த 4 மாத குழந்தைக்கு கடந்த 2ஆம் திகதி வெலிப்பிட்டிய சுகாதார காரியாலய அதிகாரிகளினால் குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர், குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக 5ஆம் திகதி இமதுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைய குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்றப்பட்ட தடுப்பூசி விஷம் அடைந்தமையாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக வெலிப்பிட்டிய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசி ஏற்றப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னரே குழந்தை உயிரிழந்துள்ளது. தடுப்பூசி விஷமடைந்திருந்தால் குறுகிய காலப்பகுதிக்குள் மரணம் இடம்பெற்று இருக்க வேண்டும். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைகளின் பிறகே மரணத்துக்கான காரணத்தை உறுதியாக கூறலாம் என சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment