போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடைக்கும், ஹெட்டியாவத்தைக்குமிடையே சேவையில் ஈடுபடும் 176ஆம் இலக்க தனியார் பஸ்ஸொன்றின் உரிமையாளரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்தது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சாரதிக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
பஸ் நடத்துநராக கடமையாற்றிய பஸ்ஸின் உரிமையாளரே, இந்த அச்சுறுத்தலை விடுத்திருந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
காணொளியின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராஜகிரிய பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் அதிகாரிக்கு கடந்த 31ஆம் திகதி குறித்த சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சந்தேகநபர் மஹரகம, நீலம்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment