ஹம்பாந்தோட்டை - புதிய பொல்பிட்டிக்கு இடையிலான உயர் மின்னழுத்த மின் விநியோக மார்க்கப் பணிகள் இடம்பெறுவதால் அதனை அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த பகுதிகளில் பட்டம் பறக்க விடப்படுவதால் மின் கம்பிகளில் பட்டங்கள் சிக்குண்டு விபத்துக்கள் ஏற்படுவது வழமையாக காணப்படுவதாகவும், இதனால் பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அன்மித்தப் பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.
இந்நிலையில், பட்டம் பறக்கவிடுவதை முடிந்தளவு தவிர்க்குமாறும் மின் கம்பிகளை இணைக்கும் நடவடிக்கைகள் குறித்த பகுதியில் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment