உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 1, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விடுவிப்பு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பதால், அரசியலமைப்புக்கு அமைய அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என அவரது சட்டத்தரணிகள் ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை முன்வைத்திருந்தனர். .

பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அப்போதைய அரச புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக ஆகியோருக்கு எதிராக, குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேரினால் 108 தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment