குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 28, 2023

குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலைகள்

றிஸ்வான் சேகு முஹைதீன்

இன்று நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய,

பெற்றோல் ஒக்டேன் 92 : ரூ. 400 இலிருந்து ரூ. 60 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.340

பெற்றோல் ஒக்டேன் 95 : ரூ. 510 இலிருந்து ரூ.135 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.375

ஒட்டோ டீசல் : ரூ. 405 இலிருந்து ரூ.80 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.325

சுப்பர் டீசல் : ரூ. 510 இலிருந்து ரூ.45 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.465

மண்ணெண்ணெய் : ரூ. 305 இலிருந்து ரூ.10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.295

அந்த வகையில்,
பெற்றோல் ஒக்டேன் 92 : ரூ.340
பெற்றோல் ஒக்டேன் 95 : ரூ. 375
ஒட்டோ டீசல் : ரூ.325
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ.465
மண்ணெண்ணெய் : ரூ.295

குறித்த விலைக்கு நிகராக, LIOC எரிபொருட்களும் விலைகளும் குறைக்கப்பட்டு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த மார்ச் 02 முதல் மண்ணெண்ணெய் ரூ. 50 இனால் குறைக்கப்பட்டிருதது.

கடந்த பெப்ரவரி 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 30 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்பு கடந்த ஜனவரி 03 முதல் டீசல் ரூ. 15 இனாலும்; மண்ணெண்ணெய் ரூ. 10 இனாலும் குறைக்கட்பட்டிருந்தது.

அதற்கு முன்பு டீசல் விலை லீற்றருக்கு ரூ. 10 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 12 முதல் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலைகள் லீற்றருக்கு முறையே ரூ. 25 மற்றும் ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஒக்டோபர் 17 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் விலைகள் முறையே ரூ. 40, ரூ. 15 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் 95 விலைகள் முறையே ரூ. 40, ரூ. 30 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

ஓகஸ்ட் 22ஆம் திகதி மண்ணெண்ணெய் விலை ரூ. 253 இனால் அதிகரித்து ரூ. 340 ஆக திருத்தப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment