நாட்டு மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

நாட்டு மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கிரிக்கெட் தொடருக்கான டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகையில், டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் முழுப் பணத்தையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளது.

அத்தோடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் பாகிஸ்தான் விரைவில் நாட்டிற்கு வரும், அதன் பின்னர் கொழும்பில் ஆசிய கோப்பை இடம்பெறவுள்ளது.

எனவே இந்த போட்டிகளை ஆதரிக்க வேண்டுமென அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment