இராஜினாமா செய்தார் லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 10, 2022

இராஜினாமா செய்தார் லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக, இன்று (10) பிற்பகல் தெரிவித்துள்ளார்.

அவரது, இராஜினாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், தற்போது துறைமுகத்திற்கு வந்துள்ள 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல், கடந்த இரண்டு தினங்களாக தரித்து நிற்கும் நிலையில், அதற்கான தொகையை (டொலரை) செலுத்த முடியாமல் போயுள்ளமையே, அவரது பதவி விலகலுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட தெஷார ஜயசிங்க கடந்த ஏப்ரல் மாதம் இராஜினாமா செய்ததை அடுத்து, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பொறியியலாளர் விஜித ஹேரத் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment