அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை/சிவப்பு பச்சை அரிசியின் (உள்நாட்டு) உச்சபட்ச சில்லறை விலை ஒரு கிலோ கிராமுக்கு ரூ. 210 என அறிவித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலைக்கு வழங்குநர், உற்பத்தியாளர், தயாரிப்பாளர், விநியோகித்தார் அல்லது வியாபாரி உள்ளிட்ட எவரேனும் விற்பனை செய்யவோ, வழங்கவோ, விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்காக வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதன் மூலம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment