இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சந்தித்துள்ள ஹரின் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சந்தித்துள்ள ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் முயற்சியில், இலங்கையில் உள்ள பல இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

அந்த வகையில், பிரபல பொலிவுட் நடிகர் டினோ மோரியா மற்றும் நடிகை சித்ரங்கதா சிங் ஆகியோர் சமீபத்தில் இலங்கையில் இருந்தபோது அவர்களை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார்.

அவர்களது சந்திப்புகளின் போது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலாத் தலமாக இலங்கையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பெர்னாண்டோ விளக்கமளித்திருந்தார் .

அத்தோடு பொலிவுட் படங்களுக்கு இலங்கையையும் ஒரு இடமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment