"தோல்வி அடைந்த ஜனாதிபதியாக வெளியேற முடியாது" : எஞ்சிய 2 வருடங்களையும் நிறைவு செய்ய தீர்மானம் : மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - கோட்டாபய ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

"தோல்வி அடைந்த ஜனாதிபதியாக வெளியேற முடியாது" : எஞ்சிய 2 வருடங்களையும் நிறைவு செய்ய தீர்மானம் : மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - கோட்டாபய ராஜபக்ஷ

ஒரு "தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது" என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ Bloomberg சர்வதேச ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (06) கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிய குறித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்ததாக, Bloomber தெரிவித்துள்ளது.

இதன்போது, “எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என குறித்த நேர்காணலில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளதாக, செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தன்னை பதவி விலகுமாறு கோரி பல மாதங்களாக வீதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தனக்கு வழங்கப்பட்டுள்ள எஞ்சிய இரண்டு வருட பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபதம் செய்துள்ளார்.

அத்துடன், இலங்கை வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில் அதனை சீர் செய்வதில் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், தாம் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment