இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 10, 2022

இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு


எதிர்வரும் திங்கட்கிழமை (13) அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேவினால் குறித்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொசொன் பெளர்ணமி தினமான ஜூன் 14 (செவ்வாய்க்கிழமை) ஏற்கனவே விடுமுறை தினமாக உள்ள நிலையில், வார இறுதி நாட்களுடன் இணைந்தவாறு திங்கட்கிழமை (13) தினத்தையும் விடுமுறை தினமாக அறிவிக்க்பபட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்கள், மின்சாரம் தொடர்பான சிக்கல்களை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த சுற்றுநிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) விடுமுறை தினமாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment