முதற் தடவையாக முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ள திமுத் கருணாரத்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

முதற் தடவையாக முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ள திமுத் கருணாரத்ன

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முதன்முறையாக ஐ.சி.சி. ஆடவர் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

அதேநேரம் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் முதற் தடவையாக முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான பாகிஸ்தானின் எட்டு விக்கெட் வெற்றியில் ஷாஹீன் அப்ரிடியின் ஏழு விக்கெட்டுகளின் செயல்திறன் அவரது தரவரிசை உயர்வுக்கு காரணியாக அமைந்துள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அப்ரிடி ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி ஜேம்ஸ் ஆண்டர்சன், ககிசோ ரபாடா மற்றும் நீல் வாக்னர் ஆகியோரை பின்ணுக்கு தள்ளி முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி வீரர் ஹசன் அலியும் ஐந்து இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை கான்பூரில் இந்தியாவுக்கு எதிராக இரு முறை மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்த புதிய வீரர் ஆக மாறியுள்ளார்.

அவ் ஆறு இடங்கள் முன்னேறி பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சக வீரர்களான டிம் சவுத்தி மற்றும் நீல் வாக்னர் ஆகியோர் முறையே மூன்றாவதும், ஆறாவதும் இடத்தில் உள்ளனர்.

இந்தியாவின் அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 28 ஆவது இடத்துக்கும், ரமேஷ் மெண்டிஸ் 28 இடங்கள் முன்னேறி 57 ஆவது இடத்துக்கும் மற்றும் சஜித் கான் 19 இடங்கள் முன்னேறி 99 ஆவது இடத்துக்கும் குறிப்பிடத்தக்க தரவரிசையில் ஏற்றம் அடைந்துள்ளனர்.

ஐ.சி.சி. டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்தின் டொம் லெதம் முறையே இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான செயல் திறனினால் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து முதல் பத்து இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.

திமுத் கருணாரத்ன காலியில் நடந்த முதல் டெஸ்டில் 147 மற்றும் 83 ஓட்டங்களுடன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நான்கு இடங்கள் முன்னேறிய அவர், ஐ.சி.சி. பட்டியில் ஏழவாது இடத்துக்கு வந்துள்ளார்.

இலங்கை அணியின் ஏனைய வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 23 ஆவது இடத்தையும் தினேஷ் சண்டிமால் நான்கு இடங்கள் முன்னேறி 46 ஆவது இடத்தையும் பிடிததுள்ளனர்.

No comments:

Post a Comment