அர்ஜுனவை அழைத்து வருவது சாத்தியமில்லை : சிங்கப்பூர் சட்டமா அதிபரிடமிருந்து பதிலில்லை - அலி சப்ரி - News View

Breaking

Friday, November 12, 2021

அர்ஜுனவை அழைத்து வருவது சாத்தியமில்லை : சிங்கப்பூர் சட்டமா அதிபரிடமிருந்து பதிலில்லை - அலி சப்ரி

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது சம்பந்தமாக சிங்கப்பூர் சட்டமா அதிபரினால் இன்னும் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவில்லையென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 

நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றின் மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார். 

அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைத்த போது, அவர் தமது பெயரை மாற்றிக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் புதிதாக இன்னுமொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதும், அதற்கான பதிலை இன்னும் சிங்கப்பூர் சட்டமா அதிபர் இலங்கைக்கு வழங்கவில்லை.

இந்த நிலையில் அவர் இல்லாமல் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்கை முன்கொண்டு செல்வதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளாரென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அதேநேரத்தில் அர்ஜுன் மகேந்திரனின் கழுத்தை பிடித்தோ அல்லது காதைப் பிடித்தோ நாட்டுக்கு இழுத்துக் கொண்டு வருவது சாத்தியமில்லயென்றும் அவர் கூறினார்.

தினகரன்

No comments:

Post a Comment