இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை பொலிஸார் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த குறித்த நபர் டுவிட்டர் மூலம் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்திய வீரர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு டுவிட்டர் மூலம் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொலிஸார் விசாரணையை தொடங்கினர். இதில், பாலியல் மிரட்டல் விடுத்த நபரை மும்பை பொலிஸார் ஐதராபாத்தில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஒரு மென்பொருள் பொறியாளர் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment