நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு மாவனல்லை ஸாஹிராவில் இரத்தான முகாம் - News View

Breaking

Wednesday, October 13, 2021

நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு மாவனல்லை ஸாஹிராவில் இரத்தான முகாம்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது.

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இரத்தான நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் ஏ.எம் நவ்ஷாட் தலைமை தாங்கினார்.

குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுக்கு கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், துறைசார் நிபுணர்கள், ஊர் மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

'வாழ்வின் வரத்தை பகிர்ந்து கொள்வோம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இரத்தான நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஸா மல்ஹர்தீன்

No comments:

Post a Comment