இனிவரும் காலங்களில் எந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எதிர்வுகூற முடியாது : விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான முறைமையை அறிந்தவர்கள் என்னை தாராளமாக சந்திக்கலாம் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Saturday, October 23, 2021

இனிவரும் காலங்களில் எந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எதிர்வுகூற முடியாது : விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான முறைமையை அறிந்தவர்கள் என்னை தாராளமாக சந்திக்கலாம் - அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

பூகோள சூழ்நிலைக்கு அமைய தற்போதைய நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எதிர்வுகூற முடியாது. உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான முறைமையை அறிந்தவர்கள் இருப்பார்களாயின் என்னை தாராளமாக சந்திக்கலாம் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய பூகோளிய நிலவரத்திற்கு அமைய எதிர்வரும் காலங்களில் எந்தெந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எம்மால் எதிர்வு கூற முடியாது. உலகில் பிரதான நாடான சீனா தனது ஐந்து நாள் சேவைத்துறையில் ஒரு நாளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறாயின் சீனாவிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

உலக சந்தையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான வழிமுறையினை அறிந்தவர்கள் எவரும் இருப்பார்களாயின் என்னை தாராளமாக சந்திக்கலாம்.

உலக சந்தையின் நிலவரத்திற்கு அமைய பொருட்களின் விலை அதிகரிப்பதை தவிர வேறொரு தீரவும் கிடையாது. என்பதை எதிர்தரப்பில் உள்ள பொருளாதார நிபுணர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

விவசாயிகள் எனது உருவப்படத்தை எரிப்பது அவசியமற்றது. ஏனெனில் வர்த்தகத்துறை அமைச்சு விவசாயத்துறை அமைச்சுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை. முரண்பட்ட வகையில் சிந்திக்காமல் ஒருமுறை சேதன பசளையை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுமாறு வலியுறுத்துகிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்கும் போது மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவார்கள் என்பதை நன்கு அறிவோம். மக்களின் வெறுப்பை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அரசாங்கம் விரும்பி அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை. அதற்கான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment