மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 25, 2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.

நேற்றையதினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பில் இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இயங்கிவ ந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலையினை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவினை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment