2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியான நிலையில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றாலும், சில பாடசாலைகளின் பெறுபேறுகள் 50% குறைவான சித்திகள் பெறப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த சட்டத்தரணி ஹபீப் றிபான் இது தொடர்பில் கோட்டக் கல்வி அதிகாரி MI.அஹ்சாபுடன் கலந்துரையாடிய பின்னர் குறித்த பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று 26.09.2021ஆம் திகதி கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடாத்தப்பட்டதுடன், இந்நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான், வலயக் கல்வி உதவிப் பணிப்பாளர் AG.அஜ்மீர், கோட்டக் கல்வி அதிகாரி MI.அஹ்ஸாப் மற்றும் அல்-ஹம்ரா, அல்-அமீன் மற்றும் அரபா பாடசாலைகளின் அதிபர்களான முறையே அன்சார், அலியார் மற்றும் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இம்முறை வெளியான பெறுபேறுகளின் குறைவிற்கான காரணம் மற்றும் இவ்வருடம் எழுதவுள்ள மாணவர்களின் பெறுபேறுகள் அதிகரிப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இவ்வருடம் எழுதவுள்ள மாணவர்களுக்கு சட்டத்தரணி ஹபீப் றிபானின் அனுசரணையில் அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினாப்பத்திரங்களை தயாரித்து பரீட்சை நடாத்தி அதனை மீட்டல் செய்தல் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment