வவுனியாவில் அதிகரித்த கொரோனா சடலங்களை கட்டுப்படுத்த ஒரே நாளில் 8 தகனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

வவுனியாவில் அதிகரித்த கொரோனா சடலங்களை கட்டுப்படுத்த ஒரே நாளில் 8 தகனம்

வவுனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகர சபையினரும் இணைந்து நேற்று (21) 8 சடலங்களை தகனம் செய்யதனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக தொடர்ந்தும் பலர் மரணித்து வரும் நிலையில் கொவிட்டால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் தேக்கமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலங்கள் தேக்கமடைவதை தவிர்க்கும் பொருட்டு வவுனியா சுகாதாரப் பிரிவினரும், நகர சபையினரும் இணைந்து காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை பூந்தோட்டம் மின் மாயானத்தில் முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி 8 சடலங்கள் அதிகபட்சமாக ஒரே நாளில் தகனம் செய்யப்பட்டப்பட்டன.

வழமையாக நாள் ஒன்றுக்கு மின் தகன இயந்திரத்தின் வினைத்திறனை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 6 வரையிலான சடலங்களே எரியூட்டப்பட்டு வந்தன. 

அத்துடன் இயந்திரமும் அவ்வப்போது பழுதடைந்தமையாலும், கோவிட் உயிரிழப்புக்கள் தொடர்கின்றமையாலும், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் வருவதானாலும் வவுனியாவில் பல சடலங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அதனை துரிதமாக தகனம் செய்யும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment