வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்த சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 116 மில்லியன் டொலர் நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 25, 2021

வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்த சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 116 மில்லியன் டொலர் நிதியுதவி

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 116 மில்லியன் அமெரிக்கன் டொலரை வழங்க தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமானது தமது அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்தும் வகையில் 650 பில்லியன் அமெரிக்கன் டொலரை ஒதுக்கியுள்ளது.

அதற்கிணங்க மேற்படி நிதியில் இருந்து 116 மில்லியன் அமெரிக்கன் டொலரை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகைமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ் லினா ஜோர்ஜியாவோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிதியின் மூலம் பெரும்பாலான நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு காத்திரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேற்படி நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புக்கு இணங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஜூலை மாதமளவில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment