அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும் கைது செய்வதற்கும் அதிகாரம் கிடையாது : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்கிறார் ரணில் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும் கைது செய்வதற்கும் அதிகாரம் கிடையாது : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்கிறார் ரணில்

(லியோ நிரோஷ தர்ஷன்)

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும் கைது செய்வதற்கும் அதிகாரம் கிடையாது. இதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் வைரஸ் தொற்று சுகாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இவ்வாறான கைதுகளை முன்னெடுக்க முடியாது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில், பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை அடக்குவதற்கு பதிலாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது. 

இதனை விடுத்து அடக்குமுறைகளையும் கைதுகளையும் கட்டவிழ்த்து விடுவது என்பது ஏற்புடையதல்ல. இதனை அனுமதிக்கவும் இயலாது. 

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோஷலிச கட்சி என்பன முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளமை சட்டத்திற்கு முரணானதாகும்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்குள் இவ்வாறான கைதுகளை முன்னெடுக்க இயலாது. எனவே பாதிக்கப்படுகிறவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment