மட்டக்களப்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

மட்டக்களப்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

பெரியகல்லாறு மூன்றாம், இரண்டாம் வட்டார பிரிவுகளிலுள்ள சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பகுதிகளில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் நா.மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பயணக்கட்டுப்பாட்டினை மீறி மக்கள் செயற்படுகின்றமையினாலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment