தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சேவைகளை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
eChannel ஊடாக நேரத்தை ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு மாத்திரம் சேவையை வழங்க எதிர்பார்ப்பதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டொக்டர் சவீந்திர கமேகே குறிப்பிட்டார்.
எனினும் நுவரெலியா, பொலன்னறுவை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய கிளைகளில் தொடர்ந்தும் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் கூறினார்.
கிளை நிறுவனங்களில் சேவையை பெறுவதற்கு முன்பதிவு செய்துள்ளவர்களுக்கான தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
COVID-19 தொற்று நிலையை கருத்திற்கொண்டு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment