ஜப்பான் நட்சத்திரத்தை தற்கொலை செய்யத் துண்டியவருக்கு அபராதம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

ஜப்பான் நட்சத்திரத்தை தற்கொலை செய்யத் துண்டியவருக்கு அபராதம்

கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட ஜப்பான் தொலைக்காட்சி நட்சத்திரம் ஹனா கிமுரா மீது இணையத்தில் கடும் விமர்சனங்களை வெளியிட்டு அவரை தற்கொலைக்குத் தூண்டிய ஆடவர் ஒருவருக்கு 9,000 யென் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த ஆடவர், கிமுராவின் சமூக ஊடகக் கணக்கில், அவர் மோசமானவர்கள் என்றும் 'எப்போது நீ சாகப்போகிறாய்?' என்றும் கடுமையாக திட்டி பதிவுகளை இட்டுள்ளார்.

22 வயதான கிமுரா இதுபோன்ற மோசமான ட்விட் பதிவுகளை நாளாந்தம் எதிர்கொண்டார்.

இந்நிலையில் அவர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் பங்கேற்ற 'டெர்ரஸ் ஹெளஸ்' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்தது. இதில் ஆறு பேர் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு அவர்களின் நாளாந்த வாழ்வு பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒருவராக பங்கேற்ற கிமுரா குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் சக விடுதி உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன் தன்னைத்தானே துன்புறுத்தும் படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, தாம் வேதனையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad