விண்வெளிக்குச் செல்லும் முதலாவது அரபு பெண் வீராங்கனை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

விண்வெளிக்குச் செல்லும் முதலாவது அரபு பெண் வீராங்கனை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதல் அரபு பெண் விண்வெளி வீராங்கனை உட்பட 2 புதிய அமீரக விண்வெளி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2 புதிய விண்வெளி வீரர்களாக நோரா அல் மத்ரூசி (வயது 27) என்ற பெண்ணும் மற்றும் முகம்மது அல் முல்லா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தெரிவு செய்யப்பட்ட இருவருக்குமான பயிற்சி, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி திட்டத்துடன் இணைந்து விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த புதிய 2 விண்வெளி வீரர்களும், ஏற்கனவே விண்வெளிக்கு சென்ற ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோருடன் இணைந்து செயல்படவுள்ளார்கள்.

விண்வெளி தொடர்பான ஆய்வுகள் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், ஆண்களின் ஆதிக்கமே இந்த துறையில் இருந்து வருகிறது. 

இதனை தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்பில் முதன் முதலாக பெண் விண்வெளி வீராங்கனை நோரா அல் மத்ரூசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இதன் மூலம் இவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்பில் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக தெரிவாக நோரா அல் மத்ரூசி இது குறித்து தெரிவிக்கையில், ‘‘இந்த தெரிவு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைப் பருவம் முதல் விண்வெளிப் பயணம் தனது விருப்பமாக இருந்து வந்தது. தற்போது இந்த கனவு நினவாகியுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment