(எம்.மனோசித்ரா)
பதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தரப்பில் தவறிழைக்கப்பட்டிருந்தால் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (24) ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் இது தொடர்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் பஸ் மற்றும் எதிர் திசையில் பயணித்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த வீதி முழுமையாக புனரமைக்கப்படவில்லை என்றும், வீதியோரத்தில் காணப்பட்ட பாரிய கற்பாறை அகற்றப்படவில்லை என்றும் இதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பு கூற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இரு தரப்பு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. விசாரணைகளின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தவறுகள் ஏற்பட்டிருப்பின் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment