வவுனியா - கனகராஜன்குளத்திலிருந்து செல் மீட்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

வவுனியா - கனகராஜன்குளத்திலிருந்து செல் மீட்பு!

வவுனியா - கனகராஜன்குளம், மன்னகுளம் - குஞ்சுக்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மற்றும் ஆர்பீஜி செல் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குரிய தோட்ட காணியொன்றினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடி பொருட்களிருப்பது தொடர்பாக நேற்று குறித்த பகுதிக்கு அருகாமையிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற இராணுவம் மற்றும் பொலிஸார் மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடி பொருட்களை மீட்டுள்ளதுடன், அதனைச் செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment