நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருடத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருடத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக (Director of Cricket), இலங்கை அணியின் முன்னாள் பிரதான பயிற்சியாளர், டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எதிர்வரும் 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் நடவடிக்கைகளை சீரமைக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் நிறுவன தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையிலான குறித்த நியமனம், 300 நாட்கள் கட்டாய பணியின் அடிப்படையில், 3 வருடங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தொடர்களுக்கு தயாராகும் வகையில் அது தொடர்பில் ஆராய்தல், உள்ளூர் தொடர் கட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்துதல், வீரர்களின் நலன்புரி விடயங்கள், கல்வி, திறன் அபிவிருத்தி, பயிற்சி மற்றும் பணிக்குழாம் கட்டமைப்பு மற்றும் உயர் செயற்றிறனுக்கு உதவுதல் மற்றும் தரவு பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் அவருக்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2007 உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை டொம் மூடி இலங்கை அணியை வழி நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடன் ஏற்கனவே பணியாற்றி, சிறந்த பெறுபேறுகளை வழங்கியவர் எனும் வகையிலும் அவரது பணியாற்றல் அறிவு தொடர்பிலும் நம்பிக்கை வெளியிட்டுள்ள, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, டொம் மூடி, எதிர்காலத்தில் எமது போட்டிகளுக்கு சிறந்த பலனை வழங்குவார் என உறுதியாக நம்வுவதாக தெரிவித்துள்ளது.

கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) தொடரின் பணிப்பாளராகவும், IPL இல் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் பயிற்சியாளராகவும் தற்போது அதன பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ள டொம் மூடி, உலகளாவிய ரீதியில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ளார் எனவும், இலங்கை கிரிக்கெட் நிறுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இங்கிலாந்தின் வொர்சஸ்டர்ஷேர் உள்ளூர் கழக அணியிலும் அதே பதவியை வகித்த அவர், மேற்கு அவுஸ்திரேலியா அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment