அப்புத்தளை நகரின் புதிய மேயர் உபுல் திசாநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் பிரதமரின் விஜேராமவிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று (2021.01.05) பதவியேற்றார்.
முன்னாள் மேயர் சம்பத் லமாஹேவாவின் பதவி விலகலை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் உபுல் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த உபுல் திசாநாயக்க இதற்கு முன்னரும் அப்புத்தளை மேயராக பதவி வகித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment