மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிசார் உட்பட 15 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். 

இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளதுடன், 5 உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுகளில் ஒருவருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 4 பேருக்கும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் உட்பட 15 பேருக்கு புதிதாக தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 215 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 222 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment