ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சியம் தயாரித்து, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பல் ஷானி அபேசேகர மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இவ்வாறு பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று (09) கம்பஹா மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, அவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்தார்.

கடந்த வழக்கு தினத்தில், அவர்களது பிணை மனு விண்ணப்பம் தொடர்பான முடிவை இன்று அறிவிப்பதாக, கம்பஹா மேல் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment