ஆயுர்வேத மருத்துவ முறைமையை அலட்சியம் செய்வதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

ஆயுர்வேத மருத்துவ முறைமையை அலட்சியம் செய்வதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - உதய கம்மன்பில

தேசிய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைமையை அலட்சியம் செய்வதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து மருத்துவ முறைமைகளிலும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தேசிய மின் கட்டமைப்பில் பாரியதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தில் குறைந்தளவான உற்பத்தி செலவிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் ஆயுர்வேத வைத்தியர் தயார் செய்த மருந்து குறித்து எதிர்த்தரப்பினர் அலட்சியமான கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.

பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய முறைமை முன்னேற்றத்துக்கு அரசாங்கம் தனி இராஜாங்க அமைச்சினை அமைத்துள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு என்றும் முன்னுரிமை வழங்கப்படும்.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளுக்கும், தேசிய பாரம்பரிய வைத்திய முறைமைக்கும் முன்னுரிமை வழங்கவில்லை. ஆனால் எமது அரசாங்கத்தில் மேற்குல உற்பத்திகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து விதமான சிகிச்சை முறைமைகளையும் தற்போது முன்னெடுத்துள்ளது. வெகுவிரைவில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment